இந்தியாவிலிருந்து பணியாளர்கள் அழைத்துவரப்பட்டனரா? அமைச்சரின் பதில் இதோ

கைத்தொழில் அமைச்சுக்குட்பட்ட எந்தவொரு தொழிற்சாலைகளுக்கும் இந்தியாவிலிருந்தோ அல்லது வேறெந்த நாடுகளிலிருந்தோ கொவிட் வைரஸ் தொற்றுக்கு பின்னர் பணியாளர்கள் அல்லது தொழில்நுட்பவியலாளர்கள் அழைக்கப்படவில்லை என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆடை தொழிற்சாலை கொவிட் தொற்றுக்கு மத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாகவும் இந்தியாலிவிருந்து சிலர் வந்ததாகவும் கொரோனா தொற்று மீண்டும் பரவியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துசாரா இந்துநில் வாய்மொழி மூலம் எழுப்பிய கோள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் தொழில்நுட்ப அல்லது வேறெந்த பணிகளுக்காகவோ பணியாளர்கள் அழைக்கப்படுவார்களாயின் முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில்சாலை முதலீட்டு சபையின் அனுமதியையும் அப்படியில்லையாயின் கைத்தொழில் தொழிற்சாலைக்கான கைத்தொழில் அமைச்சின் அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை முதலீட்டு சபையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். அது கைத்தொழில் அமைச்சு விடயதானத்துக்கு உட்பட்டதில்லை எனுவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிறுவனத்துக்கு இந்தியாலிருந்து சிலர் வந்ததாக சொல்லப்படும் விடயம் தொடர்பில் தாம் தனிப்பட்ட முறையில் கண்டறிந்தாகவும் குறிப்பிட்ட அமைச்சர். கொவிட் – 19 தொற்றுக்கு பின்னர் இந்திய பணியாளர்கள் என்ற ரீதியிலோ அல்லது தொழில்நுட்பவியளாளர்கள் என்ற ரீதியிலோ எந்தவொரு தொழிற்சாலைக்கும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். அதற்காக எந்த வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலீட்டு சபைத்தலைவரிடம் இது தொடர்பாக தாம் கேட்டதாகவும் எந்தவொரு தொழில்நுட்பவியளாளர் அல்லது வேறு எந்த பணிகளுக்காக முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வரவில்லை என முதலீட்டு சபை தலைவர் உறுதிப்படுத்தினார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்நு அது தொடர்பாக நாம் கேட்டபோது குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் இதனை உறுதி செய்ததாகவும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்தார்.

மூலம் : News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435