இன்னும் இருவாரத்தில் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு?

தேயிலைத் தோட்டத் தொழிலாளருக்கு வழங்குவதாக கூறியிருந்த 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு இன்னும் இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி. திகாம்பரம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (16) மஸ்கெலியா, பிரவுஸ்வீக் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தேயிலை விலைக்கமைய சம்பளம் அதிகரிக்கப்படும் என்று சிலர் கூறுகின்றனர். எதிர்காலத்தில் தேயிலை விளைச்சல் முற்றாக இல்லாமல் போய்விடும் என்று சிலர் மக்களை அச்சப்படுத்துகின்றனர். மக்களை ஒரே இடத்தில் முடக்கிவிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிக் இவை.

தேயிலை விளைச்சல் இல்லாமல் போனால் வெளியில் சென்று உழைத்து சிறந்த வாழ்க்கையை வாழும் தகுதி இங்குள்ளவர்களுக்கு உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நல்லாட்சி அரசாங்கம் என் அமைச்சினூடாக தோட்டத் தொழிலாளருக்கான பல்வேறு நன்மைகளை வழங்கிவருகிறது. இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435