இன்று சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம்

சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்றாகும்.

சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த தினம் சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.எல்.ஓ வின் 138[2] மற்றும் 182MtJ[3] உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த தினம் உருவாக்கப்பட்டது.

நோக்கம்

இதன் அடிப்படையில் சிறுவர் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிறுவர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

சிறுவர்கள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் சிறுவர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.

உடல் ரீதியான பாதிப்பு
உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு
உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

உடல் ரீதியான பாதிப்பு

கொடிய வறுமை, ஊட்டசத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் ஆஸ்துமா, காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.

உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன.

உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்

சிறார் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.

சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அந்தத் திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

பாடசாலைகளிலும் சமூக ரீதியாகவும் சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு பற்றிய சட்டங்களை கடுமையாக்கி, சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

ஆக்கம் – பாரதி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435