இன்று தொடக்கம் வற் வரி அதிகரிப்பு

பெறுமதி சேர்த்துக்கொள்ளப்பட்ட வரிக்கமைய வற் வரியானது நூற்றுக்கு 11 வீதத்திலிருந்து இன்று தொடக்கம்  15 வீதமாக அதிகரிக்கும் என்று தேசிய வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது.

நிதியமைச்சின் முன்மொழிவுக்கமைய இவ்வரி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 11 வீதமாக இருந்த வரியானது இன்று நள்ளிரவுக்கு முதல் மாற்றப்படாவிட்டால் நாளை(03) தொடக்கம் மாற்றமடையும். எவ்வாறிருப்பினும் இதுவரை வரி சேர்க்கப்படாது மின் கட்டணத்திற்கு இதற்குப் பின்னர் வரி சேர்த்துக்கொள்ளப்படாது என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் நூற்றுக்கு 2 வீதம் தேசிய அபிவிருத்திக்கு உள்ளடக்கப்படும் என்றும் இது நாளை தொடக்கம் மின்கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. தண்ணீர் கட்டணம் போன்றே மின் தொடர்பாடல் துறையிலும் இவ்வரி தாக்கம் செலுத்தும்.

மருந்துகளுக்கான வரி அதிகரிக்கப்படாவிடினும் தனியார் துறை சுகாதார சேவைகளுக்கான வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் இவ்வரி அதிகரிப்பானது சாதாரண மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக குறித்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435