இன்று பணிப்புறக்கணிப்பு: தனியார் பேருந்து சங்கங்களிடையே பிளவு

அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறித்துள்ளது.

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் ளுpழவ குiநெ எனப்படும் புதிய உடனடி அபராத அறிவிடல் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அந்த சங்கத்தின் மேல் மாகாண பிரதான அமைப்பாளர் யூ.கே. குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தப் போராட்டத்திற்கு தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்க மாட்டாது என அகில இலங்கை தனியார்; பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை காரணமாக பணிப்புறக்கணிப்பு குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என அகில இலங்கை தனியார்; பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435