இன்றைய சூழ்நிலையில் லெபனான் வாழ் இலங்கையர்களின் நிலை!

இன்றைய சூழ்நிலையில் வௌிநாடுகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட குழுவினர்களாக காணப்படுகின்றனர். அண்மையில் லெபனான் தலைநகர் பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வமானது அவர்களின் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இம்மாதம் 4ம்திகதி பெய்ருட்டின் துறைமுகப்பகுதியில் இடம்பெற்ற வெடிப்புசம்பவத்தினால் பலர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் புதைந்திருந்த சடலங்களில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது வேதனைக்குரிய விடயம். அவ்வாறு இறந்தவர்களில் பலர் துறைமுகத்தில் அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் பணியாற்றி வந்தவர்களாவர்.

இலங்கையர்கள் யாரும் இந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழக்கவில்லையென்றாலும் கூட சுமார் 20 பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். இருப்பிடங்கள் சிதைவடைந்தன. பல வருடங்களாக சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த அனைத்தையும் ஒரு நொடியில் காணாமல் போயின.

கொவிட் 19 தொற்றினால் ஏற்கனவே இப்புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சம்பளம் பல மாதங்களாக ஒழுங்காக வழங்கப்படவில்லை. விரைவாக தம்மை தாய்நாட்டுக்கு அழைப்பிக்குமாறு அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரி வந்தனர். கொரோனா தொற்றுக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே இவர்களின் வாழ்க்கைத்தரம் சிறந்ததாக இருக்கவில்லை. லெபனானின் பொருளாதார வீழ்ச்சியுடன் தற்போது இப்பாரிய வெடிப்பும் சேர்ந்துகொண்டது.

பெய்ருட் வெடிப்புச் சம்பவத்தில் பல வௌிநாட்டுத் தொழிலாளர்களும் ட்ரக் சாரதிகளும் காணாமல் போன நிலையில் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் யாரென இன்னும் அடையாளங்காணப்படவில்லை என பெய்ருட் ஆளுநர் மார்வன் அப்பவுட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானவர்கள் ட்ரக் சாரதிகளும் வௌிநாட்டு தொழிலாளர்களும் ஆவர். அவர்கள் அடையாளங் காணப்படவில்லை. இது மிக கடினமான பணி. இதற்கு காலம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமான முறையில் ஸ்பொன்சர் செய்து வௌிநாட்டுத் தொழிலாளர்களை அழைப்பித்து பணியில் இணைத்துக்கொள்வதனால் அத்தொழிலாளர்களை கண்காணிப்பபது அரசாங்கத்திற்கு மிகவும் சிரமானதாகியுள்ளது. அரேபிய மொழிளில் கப்லா ‘kafala’ என்று அழைக்கப்படும் வௌிநாட்டவர்களை தவறான முறையில் அழைத்து பணிக்கு அமர்த்தும் இம்முறையானது கடந்த 1960ம் ஆண்டு முதலே இந்நாட்டில் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான சடலங்கள் பெய்ருட் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளங்காண்பதில் அரசாங்கம் பாரிய பிரச்சினையை எதிர்நோக்குகிறது என்கிறது அந்நாட்டு உரிமைகளுக்காக போராடும் அமைப்பொன்று.

லெபனானில் சுமார் 250,000 புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 25,000 இலங்கையர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 25 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். பலர் இருப்பிடங்களை இழந்துள்ளனர். காயமடைந்த இலங்கையர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களின் அவ்வளவு மோசமானதாக இல்லை என்றும் லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக பல இலங்கையர்களின் தங்குமிடங்கள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை அனுப்பும் பணிகளை லெபனானுக்கான இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளது. அதேவேளை, இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை லெபனான் அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனானுடைய பொருளாதார நிலைமை கொவிட் 19 பரவல் அண்மை வாரங்களாக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. லெபனான் பவுண்ட்ஸ் அமெ. டொலருடன் ஒப்பிடும் போது 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அடிப்படை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. தொழிலின்மை 35 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 45 வீதமானவர்கள் தற்போது வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவதிற்கு முன்னரே 75 வீதமான லெபனானியர்கள் உதவி எதிர்பார்த்த நிலையில் இருந்துள்ளனர். மூன்றில் ஒரு பங்கினர் தமது தொழிலை இழந்திருந்தனர். ஒரு மில்லியன் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். கடுமையான டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் உள்ளூர் பணப்பெறுமதி 80 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இவ்வெடிப்புச் சம்பவத்தினால் 15 பில்லியன் அமெரிக்க டொலர் சேதமேற்பட்டுள்ளது என்றும் நகரில் வசித்த மூன்று இலட்சம் பேர் இருப்பிடங்களை இழந்துள்ளனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்கள் மறைமுகமாக இருப்பதும் இறப்பதும் லெபனான் அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும். வேலையிழந்த பின்னர் தாய்நாடு செல்வதற்காக பிலிப்பைன் தூதரகம் நடத்தும் இடைத்தங்கல் முகாமிற்கு வருகைத் தந்த பிலிப்பைன் பெண்னொருவர் தற்கொலை செய்துகொண்டார். சந்தேகத்துக்குரிய தற்கொலைகள் மற்றும் தப்பிச் செல்தல் என்பன மத்திய கிழக்கு நாடுகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினையாகும். மாதத்திற்கு ஒரு தடவை இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மட்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வந்த 36 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

அதிலும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுடைய நிலமை மிகவும் மோசமானது. லெபனானில் தனது தொழில்வழங்குநர்களிடமிருந்த தப்பிச் சென்று காலாவதியான வீசாவுடன் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இலங்கை அரசாங்கமானாது சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் லெபனான் அரசாங்கத்துடன் பல சிநேகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதிலும், வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், சரணடைந்தால் இலங்கை செல்லவேண்டியிருக்கும் என்ற காரணத்தினால் அவர்கள் வாய்ப்பை நழுவவிடுகின்றனர்.

லெபனான் தலைநகர் பெய்யருட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில்

குண்டுவெடிப்பை அடுத்து காணாமல் போனவர்களை அடையாளம் கண்டுள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்திய போதிலும், லெபனான் ஆர்வலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தியோகபூர்வமாக காணாமல் போனவர்களில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

1990 களின் முற்பகுதியில் இருந்து, இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக லெபனானுக்கு செல்கின்றனர். ஏனைய நாடுகளைப் போன்றே, இலங்கை அரசாங்கமும், உள்நாட்டு உழைப்பை ஏற்றுமதி செய்வதை தீவிரமாக ஊக்குவித்துள்ளது, ஏனெனில் இது நாட்டின் வெளிநாட்டு வருவாயின் மிகப்பெரிய ஆதாரமாக மாறியுள்ளது.

இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 பரவல் காரணமாக பலர் தாய்நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் நாட்டில் குறைவான தனிமைப்படுத்தல் வசதிகளே உள்ள என்ற காரணத்தைக் காட்டி அரசாங்கம் அவர்களை அழைத்து வருவதில் காட்டப்படும் தாமதநிலை மென்மேலும் அவர்களை சிக்கலில் சிக்க வைத்துள்ளமை அவர்கள் எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினையாகும்.

லெபனானின் இலங்கைக்கான தூதுவரின் தகவலுக்கமைய, இலங்கைக்கு திரும்புவதற்கான விமான டிக்கட் கட்டணம் 121,500 ரூபா ஆகும். பல இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தாய்நாட்டுக்கு திரும்புவதற்கான தேவை இருந்தபோதிலும் இத்தொகையை செலவிடுவதற்கு பணம் இல்லாமையினால் பின்னிற்கின்றனர் என்கிறார் அவர்.

நன்றி – டெய்லி மிரர்

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435