இராணுவ தொண்டர் படையணியில் 7000 வெற்றிடங்கள்

இராணுவத்தின் தொண்டர் படையணி சேவையில் 7000 வெற்றிடங்கள் இருப்பதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வெற்றிடங்களை பூர்த்திசெய்வதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விடுமுறை பெறாது சேவைக்கு சமூகமளிக்காதுள்ள படையினருக்கு இம்மாதம் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதிவரையில் பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட றெஜிமென்ட் பிரிவுக்கு சமூகமளித்து இராணுவத்திலிருந்து சட்டரீதியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அனுமதியின்றி விடுமுறையில் இருக்கும் படையினருக்கு இராணுவ நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்பெரேரா தெரிவித்துள்ளார்.

சுமார் 30,000 படையினர் விடுமுறை பெறாது சேவைக்கு சமூகமளிக்காதுள்ளனர். பொதுமன்னிப்புகால பகுதிக்கு பின்னர் சரணடையாதோரை கைதுசெய்வதற்கு பொலிசாருடன் இணைந்து விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இதன்போது தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435