தொழிலற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு வேலையற்ற பட்டதாரிகளை இணைத்து அவர்களுக்கு இரு வருட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
குறித்த பயிற்சிக்காலத்தில் அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன் அவர்கள் பிரதேச செயலகங்களில் நியமிக்கப்படவுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மாவட்ட மட்ட பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் காலங்களில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்படும் பட்டதாரிகள் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.