இறக்குமதி பசுக்களினால் பால் உற்பத்தியாளர்கள் அசௌகரியத்தில்

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் சலுகைக் கடன் அடிப்படையில் பெற்றுக்கொடுக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களினால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக உள்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு பசுக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பாலை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தப் பசுக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பசுக்கள் ஒவ்வொரு நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றதுடன், அவற்றிலிருந்து போதுமான அளவு பாலை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, தமது தவணைக் கடன்களை செலுத்த முடியாதுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ளபோதும், அவர்கள் எவ்வித தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435