இவ்வாண்டு முதல் 5 மாதங்களில் 56 திடீர் சுற்றிவளைப்புக்கள்

 இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம்  மே மாதம் 31 ஆம் திகதி  வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் விசேட விசாரணை பிரிவினூடாக 56  திடீர் சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவின் ஆலோசனைக்கமைய விசேட விசாரணைப் பிரிவு நேரடியாக 44 சுற்றிவளைப்புக்களை நடத்தியுள்ளன. மேலும் 12 சுற்றிவளைப்புக்கள் விமான நிலைய பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவினால் 50 வழக்குகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக சட்ட விரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தியவர்கள், குறைந்த வயது பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்தவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியவர்கள், போலி ஆவணங்கள் தயாரித்தவர்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களுக்குள் விசேட விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 56 மில்லியன் ரூபா (රු.55,873,531.00) மீள பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதி பொது முகாமையாளர் (சட்டம்) கீர்த்தி முதுகுமாரணவின் கண்காணிப்பின் கீழ் விசேட விசாரணை பிரிவின் முகாமையாளர் பிரதி பொலிஸ் அதிகாரி சிந்தக்க குணசேக்கரவின் வழிகாட்டலில் இச்சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், சட்டத்தரணி தலத்தா அத்துகோரள, தொடர்ந்து இப்பணியை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் போலி முகவர் நிலையங்கள், போலியான தகவல் வழங்கி வெளிநாட்டுக்கு அனுப்பும் நபர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தும் படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான முகவர் நிலையங்கள் தொடர்பில் தகவல் தெரிந்திருப்பின் உடனடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் தொலைபேசி இலக்கமான 0112 864 118 தொடர்பு கொண்டு முறையிடுமாறும் பணியகத்தின் 24 மணிநேர சேவையின் தொலைபேசி இலக்கங்களான 0112 25 11 48 / 0112 25 13 67/ 0112 25 13 86 தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435