
இலங்கை உட்பட 31 நாடுகளுக்கான வர்த்தக விமான போக்குவரத்துக்கு குவைத் தடை விதித்துள்ளது என அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து தலைமையத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன .
கொவிட் 19 தொற்று அபாயம் காரணமாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளது .
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், லெபனான், சீனா, ஈரான், பிரேசில், மெக்ஸிகோ, இத்தாலி மற்றும் ஈராக் உட்பட 31 நாடுகளுக்களுக்கான வர்த்தக விமான போக்குவரத்துக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையான புலம்பெயர் தொழிலாளர்கள் குவைத்தில் பணியாற்றுகின்றனர்.
குவைத் நேற்று (01) தனது 30 வீதமான வர்த்தக விமான போக்குவரத்தை ஆரம்பித்த நிலையில் இவ்வறிவிப்பு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் இப்போக்குவரத்து சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும்.
குவைத்தில் சுமார் சுமார் 67,000 கொரோனா தொற்று நோயாளர்கள் மற்றும் 400 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் , வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்காக ஜூன் மாத ஆரம்பம் முதல் ஐந்து கட்டத் திட்டத்தை குவைத் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.