இஸ்ரேலில் அரசியல் தஞ்சத்திற்கான அனுமதி கோரி விண்ணப்பித்த 13 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அமைச்சர் தலத்தா அத்துகோரளவிற்கு தெரியப்படுத்தியுள்ளது.
விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 6 மாத காலத்திற்கு இஸ்ரேல் சென்றுள்ள இலங்கை பிரஜைகளில் 13 பேரே இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பத்துள்ளனர்.
அரசியல் தஞ்சம் கோருவதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத காரணத்தினால் அரசியல் தஞ்சம் வழங்க வேண்டிய தேவையில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள இஸ்ரேல் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஆறு மாத கால பணிக்காக சென்ற குறித்த நபர்கள் தொடர்ந்தும் அந்நாட்டில் தங்கியிருக்கும் நோக்கிலேயே அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் என்றும் நாட்டில் நல்லிணக்கம் காணப்படும் இச்சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் கோரவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்
வேலைத்தளம்