இலங்கையரின் வீஸா காலத்தை நீடிக்குமாறு கோரும் வௌிவிவகார அமைச்சு

கோவிட் 19 எனப்பட்டும் கொரோனா தொற்று காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் வௌிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களின் வீஸா காலத்தை நீடிக்குமாறு அரசாங்கம் வௌிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிஙக இக்கோரிக்கையை விடுத்துள்ளார் என வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசு முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகள் தொடர்பில் ராஜதந்திரி உறவுகளுக்கு விளக்கும் நோக்கில் வௌிநாட்டு தூதுவர்களுடான சந்திப்பொன்றில் செயலாளர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் வீஸா காலம் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை சுற்றுலா பயணிகளுக்கும் இவ்வாய்ப்பை வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்கள் பற்றிய தற்போதைய நிலை குறித்தும் வௌிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் வௌிநாட்டு தூதுவர்களுக்க இதன் போது தகவல் வழங்கப்பட்டது.

விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையிலும் வௌிநாட்டவர்களை சொந்த நாட்டுக்கு பிரச்சினைகளின்றி அனுப்புவது குறித்தும் இச்சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435