பாரசீக குடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால், தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் 10 மாத காலப்பகுதியினுள் அந்நிய செலவணியின் வைப்பு 7.9 சத வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் அந்நிய செலாவணியில் 12.2 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக 53 கோடியே 30 இலட்சம் அமெரிக்க டொலர்களே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டமையும் அந்நிய செலாவணி வீழ்ச்சிக்கான காரணம் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.