இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை உள்ளிட்ட நிலைமைகளால் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ‘த எக்கனமிக்ஸ் டைம்ஸ்’ என்ற இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் உற்பத்தியாகின்ற தேயிலையின் ஏற்றுமதி முறையற்ற விதத்தில் இருக்கின்றமையானது, இந்தியாவின் தேயிலை உற்பத்திக்கு அனுகூலமாக அமைந்திருப்பதாவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை உள்ளிட்ட நிலைமைகளால் தேயிலை ஏற்றுமதியில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் இந்தியாவின் தேயிலைக்கான கேள்வி அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடமொன்றுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டும் இலங்கையின் தேயிலைத் துறையானது, அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.