இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தறி;கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டில் பெரும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 25;3 சுiகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
காயமடைந்தோரில் 500 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமது உறவுகளை இழந்த குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் உறைந்துபோய் உள்ளனர்.
இந்த குண்டுத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தணிப்பதற்கும் மேலும் வன்முறைகள் ஏற்படாது தடுப்பதற்கும் அரசாங்கமானது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாட்டில் உடனடியாகவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தபபட்டதுடன் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் முடக்கியிருந்தது. தவறான தகவல்கள் பரவுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
இவ்;வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தொழிலாளர்களின் செயற்பாடுகள் இன்னும் வழமைக்கு திரும்பாததை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றமையினால், தொழிலாளர்கள் தங்களது தொழில்துறையை வழமைபோல முன்னெடுத்துச் செல்வதற்கான ஏதுநிலைகள் இதுவரை ஏற்படவில்லை. நாடடின் அனைத்து பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
பாதுகாப்பு சூழ்நிலைகள் மற்றும் நாட்டின் அமைதிநிலை வழமைக்கு திரும்பும்வரை தொழிலாளர்கள் தமது தொழில் நிலைமைகள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படலாம். கடுமையான சட்ட திட்டங்களால் பாதிக்கப்படலாம். ஒன்றுமையை சீர்குழைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படலாம். இவற்றை கவனத்திற்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கருத்திற்கு கொண்டு செயற்படுவது தொழிலாளர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்..
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுளை கொண்டாட்ட ரீதியாக தவிர்ப்பதற்கு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய பேரணிகள் பொதுக் கூட்டங்கள் என்பவற்றைத் தவிர்த்து அமைதியான முறையில் இன்றைய மேதின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் துயரில் பங்கேற்கும் வகையில் தொழிலாளர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு தொழிலாளர்களும், தொழில்சங்கத்;தினரும் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை மாறி, மீண்டும் அமைதியான சூழ்நிலை ஏற்படும்வரை தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். நாட்டில் அன்றாடம் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் அரசாங்கத்தின் அறிவிப்புகள் என்பனகுறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு இது குறித்த அறிவித்தல்களை அவ்வப்போது வழங்கிக்கொண்டு, கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
வேலைத்தளம்