வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுநர்கள் இணைப்பின் பின்னர் பயிற்சிகள் வழங்குவதை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கமைய, தெரிவு செய்யப்பட்ட 45,000 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழு பயிற்சிகளை இடைநிறுத்தியுள்ள போதிலும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
தேர்தல் அறிவிக்கப்படமுன்னரே பட்டதாரி பயிலுநர் இணைப்புக்கான அறிவிப்பு வௌியாகியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரையில் சேவையில் இணைக்கப்படும் பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.