இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய நாளில் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (10) ஊடக அறிக்கை பின்வருமாறு:
01. ராகமை பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டது. நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்தமையினால் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
02. 51 வயதான ஆண் நபராவர் அவர் ராஜகிரிய பிரதேசத்தில் முதியோர் இல்லத்தில் வாழ்ந்துவந்தவராவார். கொழம்பு தேசிய வைத்தியசாலையில் 2020.11.07 அன்று அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மரணமானார்.மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிமோனியா (நுரையீரல் அழற்சி) நிலையாகும்.
03. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த ஆண் நபர் ஆவார். 2020.10.23 திகதி அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவி; 19 இனால் ஏற்பட்ட மூச்சுமண்டலத்தில் ஏற்பட்ட தொற்றாகும் .
04. கம்பஹா உடுகம்பல பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர். கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் 2020.11.09 அன்று அனுமதிக்கப்பட்டதுடன் அங்கு உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா (நுரையீரல் அழற்சி) நிலையாகும்.
05. 55 – 60 வயதிற்கு இடைப்பட்டவர் என அடையாளம் காணப்பட்ட ஆண் நபர் ஆவார். பிரேத பரிசோதனைக்காக சடலம் 2020.11.08 ஆம் திகதி அன்று சமர்ப்பிக்கப்ப்டது. இதன் போது கொவிட் 19 தொற்று நோய்க்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டார். மரணத்திற்கு காரணமாக கொவிட் நோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இது வரையில் இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் மரணமடைந்த மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.