புதிய விதிமுறையால் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து அனுமதிப்பத்திரம் இன்றி கள் இறக்க தடை விதித்து, வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 20 ஆம் திகதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.

இந்த அறிவித்தலின்படி கிதுல் மரங்களைத் தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கல் சீவுவதற்கோ, எடுப்பதற்கோ, இறக்குவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தேச புதிய சட்டத்தின்படி கித்துள் மரம் தவிர்ந்த வேறு எந்தவொரு மரத்தில் இருந்தும் கள் சீவுவதோ, எடுப்பதோ, இறக்குவதோ தடை செய்யப்படுகிறது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் வடக்கில் மட்டும் சீவல் தொழிலை நம்பியிருக்கும் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமம் கொத்தணியின் தலைவர் எஸ்.செல்வராசா தெரிவித்தார்.

மதுவரித் திருத்தச் சட்ட வரைவு என்ற வகையில் இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கித்துள், பனை, தென்னை தவிர்ந்த வேறு எந்த மரத்தில் இருந்தும் கள்ளு சீவுவது, எடுப்பது, இறக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று இருந்தது.

இப்போது பனை மற்றும் தென்னை மரங்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அது நடைமுறைக்கு வரவுள்ளது.

பனை, தென்னை மரங்கள் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலேயே அதிகம் இருக்கின்றன.

வடக்கில் பனை, தென்னை மரங்களில் இருந்தே காலம் காலமாக கள்ளு உற்பத்தி செய்கிறோம். இதனை நம்பி 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன.

சட்டம் நடைமுறைக்கு வந்தால் அது இந்தக் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிடும்.

எனவே இது குறித்து பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களை அழைத்து ஆராயவுள்ளதாக பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமம் கொத்தணியின் தலைவர் எஸ்.செல்வராசா தெரிவித்தார்.

தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பத்திரம் கட்டாயமானது என நிதி அமைச்சு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435