இலங்கையில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களின் நிலைமை

இலங்கையில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டு 60, 000 ஆயிரம் ரூபா (25 ஆயிரத்து 253 இந்திய ரூபா) சம்பளம் வழங்கப்படுவதாக தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சண்டே ரைம்ஸ் நாளிதழ் குழுவொன்று, இலங்கையில் பணியாற்றும் தமிழக பணியாளர் குழுவொன்றை சந்தித்தபோது, அவர்களால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பணியிடத்தில் 250 தமிழக தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொழில் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்கள் சேவையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அடங்கலாக வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவதாகவும், எந்தவொரு விடுமுறையும் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணிவரை 12 மணி நேரம் பணியாற்றுவதாக குறித்த பணியிடத்தில் பணியாற்றும் தமிழக பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எமது பணி முடிந்தவுடன், எமக்குத் தேவையான உணவுகளை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், உழைக்கின்ற பணம் உணவுக்கே செலவாகிவிடும். இலங்கையில் உணவு விலை அதிகம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையர்களுடன் பணியாற்றும்போது, தொடர்பாடல் பிரச்சினையை தாம் எதர்கொள்வதாகவும் தமிழக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

நன்றி சண்டே ரைம்ஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435