இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்று நாட்டிற்கு வருகை தந்த 41 வயதான நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கந்தகாடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்த 37 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர், பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, கந்தகாடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த மற்றுமொருவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்த 43 வயதான நபர் தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435