
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 52 பேருக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின், தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் நேற்று இரவு 11.52 மணிக்கு வெளியிட்ட கொரோனா நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முதலாவது கொவிட்-19 நோயாளி அடையாளம் காணப்பட்டார். சீனா பெண் ஒருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு அவர், நோயிலிருந்து குணமடைந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த மார்;ச் மாதம் 11 ஆம் திகதி, தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்.
இந்த நிலையில், மார்ச் மாதம் 24ஆம் திகதிவரை, அதாவது, 14 தினங்களில் முதல் 100 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
பின்னர், அடுத்த நூறு நோயாளர்கள் மார்ச் 25 ஆம் திகதிமுதல், ஏப்ரல் 12 அம் திகதிவரையான 19 தினங்களின் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நிலையில், அடுத்த 100 நோயாளர்கள் 9 நாட்களிலும், அடுத்த 100 நோயாளர்கள் 4 நாட்களிலிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அறிக்கையில் அறியக்கூடியதாக உள்ளது.
முதல் 200 நோயாளர்கள் ஒரு மாத காலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடுத்த 220 நோயாளர்கள் 13 நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.