இலங்கையில் 42,000 வேலையற்ற பட்டதாரிகள்

இலங்கையில் தற்போது 42,000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில் வாய்ப்புகள் வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானாநந்த தேரர் குறிப்பிட்டார்.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம். ரபீக்கிடம் வினவப்பட்டது. அரச சேவையில் பட்டதாரிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை அவர் கோரியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், மாகாண பிரதம செயலாளர்களுக்கும் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெற்றிடங்கள் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றதும், பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

நன்றி- நியுஸ் பர்ஸ்ட்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435