கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான செயற்பாடுகள் கொழும்பு துறைமுகத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் முனையம் என்பனவற்றிற்கு வருகைதரும் பயணிகள் கப்பல் மற்றும் பயணிகள் தொடர்பில் எவ்வித பாதுகாப்பு முறைமைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சிலரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்று துறைமுக அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு 2 ஆயிரம் பயணிகளுடன் கப்பல் ஒன்று வருகைதருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக சுகாதார சேவை பதில் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் பயணிகளை பரிசோனைக்கு உட்படுத்துவதுபோல அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.