இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் (15) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்தத் தகவல் உறுதிசெய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
01. கொழும்பு 13 ஜிந்துபிட்டி பகுதியைச்சேர்ந்த 54 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீண்டகாலமாக இருந்துவந்த நுரையீரல் புற்றுநோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையால் அதிகரித்தமை என தெரிவிக்கப்ட்டுள்ளது..
02. கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஆண் நபர். கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டப் பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீண்ட கால புற்றநோயினால் அவதிப்பட்டமை மற்றும் கொவிட் தொற்று நிமோனியா நிலைமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
03. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 88 வயதான ஆண் நபர் மார்பு வலியின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
04. கொழும்பு 08 பொரளை பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஆண் நபர் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானமையினால் நீண்டகால நுரையீரல் நோய் அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
05. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 88 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று மற்றும் மாரடைப்பு ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.