இலங்கையில் 6ஆயிரத்துக்கும் அதிகமான சீன ஊழியர்கள்

இலங்கையில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான சீனர்கள் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களைக் கையாளும், அதிகாரியான யாங் சூயுவான், இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை – சீன கூட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதிலேயே பெரும்பாலான சீனர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், நெடுஞ்சாலைத் திட்டங்கள், மற்றும் அதியுயர் கட்டடங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளிலேயே பெரும்பாலும் சீனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சீன- இலங்கை கூட்டுத் திட்டங்களில் தொடர்புடைய சீன நிறுவனங்கள், சீனப் பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீன தூதுரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435