இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

இலங்கை ஆசிரியர் சேவை யாப்பில் மாற்றம் செய்யப்பட்ட 16 பிரிவுகள் தொடர்பில் அறிந்திருப்பது மிகவும் அவசியமென்பதால் எதிர்வரும் வாரங்களில் அதனை அறிந்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் சங்க ஒன்றிணைப்பு கல்வியமைச்சிடம் கோரியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை யாப்பில் 16 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் கல்வியமைச்சு தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், அவை யாப்பு மாற்றமா அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதிய சேவை யாப்பை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பொது ஆலோசனையடங்கிய நூலா என்பது தொடர்பில் அமைச்சு தெளிவாக கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சேவையில் அரைவாசிக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் தரத்திற்கு 1994ம் ஆண்டு ஆசிரியர் சேவை யாப்பிலும் 2004ம் ஆண்டு யாப்பு மாற்றத்திலும் 2014 புதிய ஆசிரியர் சேவை யாப்பிலும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம் அதனால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் வரையில் செல்ல வேண்டியேற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

குறித்த பிழையை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு கல்வியமைச்சுடன் பல தடவை பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதாகவும் கடந்த டிசம்பர் 6ம் திகதி இறுதியாக தேசிய வேதன ஆணைக்குழுவில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமை மிகுந்த கவலைக்குரிய காரணம் என்றும் அச்சங்க தெரிவித்துள்ளது.

மவ்பிம
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435