இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அந்த அறிக்கையினை கையளித்தது.
இந்தக் குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒய்வுபெற்ற பொருளியில் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டி.லக்ஷமனினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அந்தக் குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
#இலங்கை #சிங்கப்பூர் #சுதந்திர_வர்த்தக_ஒப்பந்தம்