வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து உதவி மருத்துவர்கள், தாதியர் பணியார்கள், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியார்கள் ஆகியோர் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் இன்று (22) ஈடுபடவுள்ளனர்.
சுகாதார பணியாளர்களின் வேதன முரண்பாடுகளை நிவர்த்தித்தல், நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை உடன் வழங்குதல், தற்போது வழங்கப்பட்டு வரும் மேலதிக கொடுப்பனவுகளை குறைப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ரத்துச் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத் இவ்வடையாள பணி நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணியாளர்களின் ஒன்றிணையத்தின் இணைப்பாளர் சமன் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைள் தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து உரிய தீர்வை வழங்க அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த அடையாள பணிநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக சுகாதார சேவைகள் பணியாளர்களின் ஒன்றிணையத்தின் இணைப்பாளர் சமன் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.