இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கம் ஜனாதிபதி சந்திப்பு

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுகொடுக்க முன்வந்தமைக்கு இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (31) ஜனாதிபதிக்கும் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பொன்று ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இலங்கை சுதந்திர சஙகம் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் கடிதம் மூலமாக அபிவிருத்தி அதிகாரி சேவையில் அடையாளங்காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

அபிவிருத்தி அதிகாரிகளின் கடமைபொறுப்பு பட்டியலை விரைவில் பெற்றுக்கொள்ளல், 1999, 2005 மற்றும் 2008 காலப்பகுதியில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை சேவைக்கு உள்வாங்கல், சிரேஷ்ட பொறுப்பு கொடுப்பனவை அதிகரித்தல், அலுவலக சேவைக்காக கணனி வசதிகளை வழங்குதல், அபிவிருத்தி அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட கணனி தேர்ச்சி பரீட்சையில் சித்திபெற்றோருக்கு வழங்கப்பட வேண்டிய ஏழாயிரம் கொடுப்பனவை வழங்கல், உரிய பதவியுயர்வு மற்றும் இடமாற்றலுக்கான திட்டத்தை தயாரித்தல் அறிமுகபபடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கிராம சேவையாளர் பிரிவுகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய கௌரவத்தை பெற்றுக்கொடுத்தல், அபிவிருத்தி அதிகாரிகளுக்கான புதிய பயிற்சி செயலமர்வுகளை நடத்துதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.

களனி பல்கலைக்கழகத்தின் ஒலி தொழில்நுட்பதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கல் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் யாழ் பட்டதாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தபட்டபோது முறையான திட்டத்தினூடாக உரிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்று இதன் போது ஜனாதிபதி உறுதியளித்தார்.

மேலும் அபிவிருத்தி அதிகாரிகளின் இடமாற்றத்தின் போது நாட்டின் அபிவிருத்தி மற்றும் தமது சொந்த அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு இடமாற்றத்தை பெற்றுகொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் மநுல சமல் பெரேரா, செயலாளர் துஷார திலக்கரத்ன உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள், நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க, அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி, சுதேச அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் டி அல்விஸ் உட்பட உயரதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435