இலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், முப்பது நிமிடத்துக்குள் 50 கிலோ எடை கொண்ட பதினேழு மா மூட்டைகளை 30 மீற்றர் தூரம் தனது பற்களால் காவிச் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜனக காஞ்சன முதன்னாயக்க என்ற இந்த ஊழியர், அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் கின்னஸ் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் (29) இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இலங்கை சார்பாக பதினேழு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் தனது தந்தையின் சாதனையை முறியடித்து, பதினெட்டு கின்னஸ் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று, சாதனை நிகழ்வின் பின் பேசியபோது முதன்னாயக்க தெரிவித்தார்.
இதற்கு முன் இரண்டு கின்னஸ் சாதனைகளை முதன்னாயக்க நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.