மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் பெண்களுக்கு முழுநேர பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலஙகை சுலைமான் ஜே. மொஹிடீன் தெரிவித்துள்ளார்.
சில ஆசிய நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை நிறுத்தியுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பணிப்பெண்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இலங்கை மற்றம் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்த அதிக எண்ணிக்கையான பெண்கள் பணிப்பெண்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் அவ்வாறு அனுப்பி வைக்கும் பெண்களுக்கு முழுநேர, தங்குமிட வசதியுடன் கூடிய பயிற்சிகளை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்குகிறது என்று கல்ப நியுஸ் ஊடகத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.
இப்பணிப்பெண்களுக்கு மின்சாதனப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது, முதலுதவி வழங்குவது, உட்பட அன்றாட வீட்டு வேலை நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வேலைத்தளம்/ கல்ப் நியுஸ்