இலங்கை பேஸ்புக் பாவனையாளர் கவனத்திற்கு

இலங்கையில் பேஸ்புக் ஊடாக பரப்பப்படுகின்ற இன மற்றும் மத வாதம் சம்மந்தமான வெறுப்புணர்வு கருத்துக்களை தடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் இநத விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மெசஞ்சர் ஊடாக ஒரு தகவலை ஐந்து பேருக்கு மாத்திரமே பகிர முடியும்.

அத்துடன் வெறுப்புணர்வு சொற்களை கொண்டுள்ள பதிவுகளை அடையாளம் கண்டு தணிக்கை செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தையும் ஈடுபடுத்தியுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கண்டி மற்றும் திகனயில் பதிவான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து இலங்கையில் முதன் முதலாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட முஸ்லிம் அரசு பயங்கரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.

வெறுப்புணர்வு கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவுவதன் விளைவாகவே வன்முறைகளும் ஏற்படுவதாக அரசாங்கம் கருதுகின்றது.

இந்தநிலையில் அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435