இலங்கை மருத்துவர் கவுன்சிலுக்கு எதிராக முறைப்பாடு

இலங்கை மருத்துவர் கவுன்சிலுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கடந்த 8 வருடங்களாக சட்ட விரோதமாக மாலபே பிரதேசத்தில் நடத்தப்பட்டு வரும் சைட்டம் வைத்திய பட்டப்படிப்பை விற்பனை செய்யும் நிறுவனத்தை சட்டரீதியாக நடத்துவதற்கு தற்போதைய அரசு முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்படி விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது செயன்முறை பயிற்சிகள் போதாமையினால் வைத்திய சட்ட மூலத்தின் கீழ் அவ்வைத்திய கல்லூரி மாணவர்கள் பதிவு செய்வது நிராகதிக்கப்பட்டிருந்தாலும் இலங்கை மருத்துவர் கவுன்சிலினால் இவர்கள் மருத்துவர்களாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அிகல இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று (13) காலை 10.30 மணிக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435