கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பு- சுழற்சி முறையில் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள வெவ்வேறு கல்விசாரா ஊழியர்களுக்கான பதவிநிலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் மற்றும் குளறுபடிகள் காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இவர்கள் நேற்றுமுன்தினம் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உயர்கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட பெயர்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டதனாலேயே குளறுபடியேற்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளை வழங்க கல்வியமைச்சோ பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ முன்வரவில்லை. எமது நியாயமான கோரிக்கைக்கு மக்கள் பிரதிநிதிகளோ அரசியல்வாதிகளோ அக்கறையும் காட்டவில்லை என்று விசனம் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டவர்கள் உரிய தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435