இலங்கை மின்சார சேவையாளர் சங்கத்தினர் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாமை மற்றும் ஆட்குறைப்பு செய்யப்படுதல் என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சேவையாளர் சங்கத்தினர் இன்று (05) நள்ளிரவு 12 மணிமுதல் நாளை (06) நள்ளிரவு 12 மணி வரை 24 மணி நேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சேவையாளர் சங்க ஊழியர்களுக்குமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் சம்பள உயர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதன்போது இலங்கை மின்சார சபை நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் நூற்றுக்கு 70 வீதத்துக்கும் அதிக சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஏனைய பணியாளர்களுக்கு நூற்றுக்கு 30 வீத சம்பள அதிகரிப்பை வழங்கி சம்பள விடயத்தில் முரண்பாட்டை தோற்றுவித்தனர்.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தொடர்ச்சியான வலியுறுத்தல்களை செய்து வந்தோம் . ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதும் சம்பள முரண்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், இன்று ஆரம்பிக்கவுள்ள இந்த 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு, அதற்கு அப்பாலும் நீடிப்பதை தவிர்க்க முடியாது என இலங்கை மின்சார சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கை மின்சார சேவையாளர்களின் சம்பளம் 24 ஆயிரத்து 600 ரூபா என்று இருந்தது. இந்த நிலையில் அப்போது வழங்கப்பட்ட நூற்றுக்கு 30 வீத சம்பள அதிகரிப்புடன் 34 ஆயிரமாக அதிகரித்ததாக இலங்கை மின்சார சபை தலைவர் அனுரா விஜேபால முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு இருந்த 24 ஆயிரத்து 600 ரூபா சம்பளத்துடன் 2018 ஜனவரி மாதத்தில் 51 ஆயிரம் ரூபாவாக சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஒன்றுக்கு ஆறு என்ற நியாயத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு கோருகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இதனை மேற்கொள்கின்றனர். சில அரசியல் காரணிகளும் உள்ளடக்கி இது முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு எம்மால் இணங்க முடியாது என்று இலங்கை மின்சார சபை தலைவர் அனுரா விஜேபால ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435