அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள துணிகளை தூய்மைப்படுத்தும் பொறுப்பை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு சலவைத்தொழிலாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமக்கு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் மார்க்கத்தை இல்லாமல் செய்யும் வகையில் அரசாங்கம் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள சலவைத் தொழிலாளர்கள் சங்கம் உடனடியாக அவ்வொப்பந்தத்தை ரத்து செய்யுமாறும் தெரிவித்துள்ளது.
சலவைத் தொழிலாளர் சங்கம் எதிர்வரும் தினங்களில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சலவைத் தொழிலாளர்கள் சங்கம் போராட்டத்தில் குதிப்பது இதுவே முதற்தடவையாகும்.
மேல் மாகாணத்தில் சில வைத்தியசாலைகளின் துணிகளை தூய்மைப்படுத்தும் செயற்பாட்டை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா ஈ நியுஸ்
வேலைத்தளம்