வௌிநாடுகளில் பணியாற்றும் சுமார் 27,000 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களில் தங்கி வாழ்வோர் 17,000 இற்கும் அதிகமாகும். மேலும் 6000 மாணவர்கள், குறுகிய கால வீஸா அனுமதி கொண்டுள்ளோர் மற்றும் 3,000 சுற்றுலா பயணிகள் உள்ளடங்குகின்றனர்.
வௌிவிவகார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ‘contact Sri Lanka’ இணையதளம் மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக இவர்கள் நாட்டுக்கு திரும்பும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். தற்போது அரசாங்கம் மாணவர்கள் மற்றும் அரசின் பயிற்சிநெறிகளுக்காக தெற்காசிய நாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறது.
அதன் பின்னர் ஏனைய நாடுகள் குறித்த வௌிவிவகார அமைச்சு உன்னிப்பாக கவனம் செலுத்தி, மீண்டும் தமது நாட்டுக்கு திரும்புவது குறித்து தீர்மானித்தல் மற்றும் வசதிகள் வழங்குதல் கொள்கை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்மானம் எடுக்கப்படும்.
வௌிநாடுகளில் உள்ள துன்பப்படும் இலங்கை தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு இலங்கை தூதுவர்களுக்கு இயலுமாகியுள்ளது. புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு (IOM), கரிடாஸ் மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புக்களினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களினூடாக நிவாரணங்களினூடாக அத்தூதுவர்கள் தமது செயற்பாடுகளை மேலும் அபிவிருத்தி செய்துக்கொண்டுள்ளனர் என்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.