
இலங்கை சுற்றுலாத்துறை தொடர்பில் கட்டார் மக்கள் மற்றும் அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களை தௌிவுபடுத்துவதற்கான நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கட்டாருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எம். கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், கட்டாரில் இருந்த பலர் இலங்கைக்கு சுற்றுலா பிரயாணிகளாக வருகின்ற போதிலும் சுற்றுலாவுக்கான சிறப்பு பெற்ற இடங்கள் தொடர்பில் விளக்கமில்லாதவர்களாகவே உள்ளனர். எனவே இது தொடர்பில் அவர்களை தௌிவுபடுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இதனூடாக வேலைவாய்ப்பை அதிகரித்துக்கொள்ளவும் முதலீட்டு வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்