
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தனது நிறுவனத்திற்கு அதிக எண்ணிக்கையான வௌிநாட்டவர்களை தனது நிறுவனத்தில் ஊழியர்களாக இணைத்துக்கொள்ளவுள்ளதாக கட்டார் நிறுவனமான ஹமாட் மெடிகல் கோர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
அதற்கமைய அடுத்த ஆண்டு இறுதியில் சுமார் 2690 வேலைவாய்ப்புக்களை வழங்க தாம் தயாராகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள மருத்துவமனைகள் உட்பட ஏனைய மருத்துவசார் நிறுவனங்களில் ,இவ்வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும் மருத்துவ அதிகாரிகள், தாதிகள் உட்பட பல மருத்துவத்துறை சார் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் புதிய ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கு அந்நாட்டு தொழில் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விண்ணப்படிவங்களை www.hamad.qa/EN/join-Us/HR/apply-online/pages/default.aspx என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவன நிர்வாகச் சேவையில் உள்நாட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கட்டார் நிறுவனமாக சிட்ரா மெடிகல் அண்ட் ரிசர்ச் சென்ரரிலும் (Sidra Medical & Research Center) சுமார் 4000 வேலைவாய்ப்புக்கள் காணப்படுகிறது என்றும் அதற்கான ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
உள்நாட்டு வௌிநாட்டு மருத்துவசார் ஊழியர்களுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்.
வேலைத்தளம்