இலவச வீஸா மட்டுமே – நடைமுறைச் செயற்பாடுகள் தொடரும்

இலங்கைக்கு வருகைத் தருவதற்கு 48 நாடுகளுக்கு இலவச வீஸா வழங்கும் நடைமுறையானது எந்தவித கண்காணிப்புமின்றி யார் வேண்டுமானாலும் நடைமுறைச் செயற்பாடுகள் எதுவுமின்றி நாட்டுக்கு வரலாம் என்பதல்ல என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

வழமையான அனைத்து நடைமுறைகளுடனும் வீஸாவுக்கு விண்ணப்பிக்கவேண்டும் ஆனால் கட்டணம் மட்டும் செலுத்தத்தேவையில்லை. இது தொடர்பில் யாரும் குழப்பமடையத் தேவையில்லை என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்பும் சுற்றுலாப்பிரயாணிகள் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். குழப்பங்கள் இருப்பின் வழிமுறைகள் விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பிரயாணிகளின் அதிகரித்துள்ளது. ஓகஸ்ட் மாத இறுதியில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப்பிரயாணிகளின் எண்ணிக்கை 167,000 ஆகும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு வீஸா கட்டணம் விலக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்கி எதிர்வரும் 2020 வரை இவ்வசதி தொடரும். நாட்டில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பதற்கு படையினர் தொடர்ந்தும் பாதுகாப்புத் தரப்பினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் நடக்கும் போரா மாநாட்டிற்கு சுமார் 25,000 வௌிநாட்டவர்கள் வருகைத்தருகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435