கல்வி நிர்வாக சேவைக்கு உரிய தகைமைகள் இல்லாதவர்களை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு முந்திய காலங்களில் இத்தகைய நிலைமைகள் காணப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் இந்நிலை தொடரக்கூடாது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.