இளம் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கை வங்கியினூடாக கடனுதவி வழங்குவதற்கு ‘துருனு திரிய’ கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் காரியாலயத்துடன் இணைந்து, கொள்கை அபிவிருத்தி காரியாலயம், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் கண்காணிப்பின் கீழ் சிறுவியாபார அபிவிருத்தி பிரிவு இப்புதிய திட்டத்தை செயற்படுத்த அனுசரணை வழங்குகிறது.
இப்புதிய திட்டத்தினூடாக 35 வயதுக்கும் குறைந்த, வியாபாரத்துறையில் 3 வருட அனுபவம் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் அரச நிறுவனம், பிரதேச அல்லது மாகாண அரசுக்கு கீழ் இயங்கும் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அவசியமாகும். தொழிற்கல்வி NVQ டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு மற்றும் ஒழுங்கான முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதும் அவசிமாகும்.
இலகு பிணை கையெழுத்து முறையுடன் கொடுக்கப்படும் இக்கடனுதவியை பெறுவதற்கான வியாபார திட்டமொன்றை முன்வைத்தல் வேண்டும். அதற்கான உதவியை பிரதேச செயலக அதிகாரிகள் வழங்குவர். மேலதிக தகவல்களை அவ்வவ் பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.