சப்ரகமுவ மாகாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது என்று மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 400 பட்டதாரிகளுக்கே எதிர்வரும் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நியமனத்தினூடாக கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஓரளவுக்கு தீர்வு ஏற்படும். தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் செயலாளர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435