உங்களது நாளாந்த சம்பளம் என்ன?

இன்றைய சூழ்நிலையில் தொழிலுக்குச் செல்லாமல் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதே சிரமம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எமது நாட்டிலுள்ள குறைந்தபட்ச சம்பளத் தொடர்பில் அறிந்துக்கொள்வதற்காக இவ்வாக்கம் வழங்கப்படுகிறது.

இலங்கையில் குறைந்தபட்ச ஊதியம் என்று எதுவும் இல்லை. குறைந்தபட்ச வேதனங்களானவை குறைக்கு உரித்தான முத்தரப்பு சபைகளால் இலங்கையில் 40க்கு மேற்பட்ட தொழில்துறைகளில் தீர்மானிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியமானது மணித்தியாலத்திற்கு வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு என்ற அடிப்படையில் ஊதியங்கள் சபை கட்டளைச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஊதிய சபைகளினால் தீர்மானிக்கப்படக்கூடும். வேலைவழங்குனர்கள் குறித்த ஊதிய வர்த்தக ஊதிய சபையால் தீர்மானிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை செலுத்துவதற்கு வேண்டப்படுகின்றனர் குறைந்த பட்ச ஊதியத்தை தீர்மானிப்பதற்கான விசேட அளவுகோல் எதுவும் இல்லை. தொழில்துறை வியாபாரத்திலுள்ள பணியாளர்களுக்கு பிரயோகிக்கக்கூடிய வாழ்க்கைச்செலவு சுட்டியின் பிரகாரம் அது சரி செய்யப்படுகிறது. தொழில்துறை பிராந்தியம், தொழிலாளரின் வகை என்பவற்றின் பிரகாரம் குறைந்தபட்ச ஊதிய விகிதம் வேறுபடுகிறது. குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரிப்பதானது அரசாங்கம் தொழில்சங்கம் பிரதிநிதிகள் மற்றம் வேலை வழங்குனர்களினால் தீர்மானிக்கப்படுகிறது.

பணியாட்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டம் 2016 இன் கீழாக எந்த ஒரு தொழில் அல்லது சேவையிலும் இருக்கின்ற அனைத்துப் பணியாட்களுக்கும் தேசீய குறைந்த பட்ச மாதாந்திர ஊதியமாக 10,000 (பத்து ஆயிரம்) ரூபாய்கள் எனவும், தேசீய தினசரி ஊதியமாக 400 (நானூறு) ரூபாய்கள் எனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பணியமர்த்துபவர் இதற்காக தமது வளாகத்தில் ஒரு பதிவேட்டினை பராமரிக்கவும் அதில் பின்வரும் தகவல்கள் கொண்டிருக்கவேண்டும் எனவும் கோரப்படுகிறது: அவரால் பணியமர்த்தப்படுகின்ற ஒவ்வொரு பணியாளரின் பெயர்; பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு பணியாளராலும் செயலாற்றப்படும் பணியின் வகை; மற்றும் ஒவ்வொரு பணியாளருக்கும் செலுத்தப்படும் தொகை. இப்படியான பதிவேட்டினை 6 ஆண்டுக் காலத்திற்கு போற்றிக்காக்க பணியமர்த்துபவர் கோரப்படுகிறார்.

பணியாற்றிய நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதிய விகிதம் (பொதுவான குறைந்தபட்ச கால விகிதம் என குறிப்பிடப்படுவது), எண்ணிக்கையிலான பணிக்கு குறைந்தபட்ச ஊதிய விகிதம் (பொதுவான எண்ணிக்கை விகிதம் என குறிக்கப்படுவது), பணியாற்றிய நேரத்தின் அடிப்படையிலான குறைந்தபட்ச சம்பாத்தியத்தை உறுதி செய்வதற்காக எண்ணிக்கை விகித பணியாளர்களுக்கு பொருத்தமாகும் வகையிலான ஒரு குறைந்தபட்ச நேரவிகிதம் (உத்தரவாதமளிக்கப்பட்ட நேர விகிதம்), மற்றும் பணியாளர்களால் செய்யப்பட்ட அதிகப்படியான நேரத்திற்கான குறைந்தபட்ச விகிதம் ஆகியவற்றை ஊதிய வாரியங்கள் நிர்ணயிக்கின்றன.

பணியாளருக்கான வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸ் சட்டம் 2016 இன் கீழாக, 01 மே 2015 (டிசம்பர் 2015 வரை) முதல் ஒவ்வொரு பணியாளருக்கும், அந்தப் பணியாளரின் வழக்கப்படியான சம்பாத்தியத்தைப் பொருத்து, பின் வரும் தொகைகளை “வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸாக”, வழங்க பணியமர்த்துபவர்கள் வேண்டப்படுகிறார்கள்:

a) 1,500 ரூபாய், மாதம் ஒன்றுக்கு, மாதாந்திர சம்பளமானது 40,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பின்;

b) 60 ரூபாய், நாள் ஒன்றுக்கு, அவரது/அவளது தினசரி ஊதியமானது 1,600 ரூபாய்க்கு மிகாமல் இருப்பின்;

c) எண்ணிக்கை விகித பணியாளர்களுக்கு ஒரு மாதத்தில் கொடுக்கப்படக்கூடிய ஊதியம் அல்லது சம்பளத்தின் 15%;

d) சம்பள விகிதம் 40,000 ரூபாய்க்கு அதிகமாகவும் ஆனால் 41,500 (அதிகபட்ச ஊதியம்) ரூபாய்க்கு மிகாமலும் இருக்கும் பட்சத்தில் அதிகபட்ச ஊதியம் மற்றும் உள்ளபடியான ஊதியம் ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம்; மற்றும்

e) தினசரி விகிதமானது 1,600 மற்றும் 1,660 க்கு இடையில் இருந்தால் 41,500 ரூபாய்க்கும் சம்பந்தப்பட்ட மாதத்தின் மொத்த ஊதியத்துக்கும் இடையிலான வித்தியாசத்தின் 4%.

இதில் முதல் மூன்று நிகழ்வுகளில் அதிக பட்ச “வரவுசெலவு ரீதியிலான நிவாரண அலவன்ஸ்-க்கான“ அதிகபட்ச தொகையானது 1,500 ரூபாயாக இருக்கும்.

ஜனவரி 2016 க்கு மேற்பட்டு, பணியாளரின் வழக்கமான சம்பாத்தியத்தைப் பொருத்து, பின் வரும் தொகைகள் “வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸாக” வழங்கப்படுகிறது:

1,000 ரூபாய், மாதம் ஒன்றுக்கு, மாதாந்திர சம்பளமானது 40,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பின்;
40 ரூபாய், நாள் ஒன்றுக்கு, அவரது/அவளது தினசரி ஊதியமானது 1,600 ரூபாய்க்கு மிகாமல் இருப்பின்; மற்றும்
எண்ணிக்கை விகித பணியாளர்களுக்கு ஒரு மாதத்தில் கொடுக்கப்படக்கூடிய ஊதியம் அல்லது சம்பளத்தின் 10%;
வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸ்-க்கான 2016 ஆம் ஆண்டிற்கான அதிக பட்ச தொகையானது 1,000 ரூபாய் ஆகும்.

ஆதாரம்:ஊதிய வாரியங்களின் அவசர சட்டத்தின் §21-22; பணியாளர்களுக்கான வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸ் சட்டம் 2016 –இன் §3; பணியாளர்களுக்கான தேசீய குறைந்தபட்ச பணியாளர் ஊதிய சட்டம் 2016 இன் §3 & 5

குறைந்தபட்ச ஊதிய வீதத்தை அறிய குறைந்தபட்ச ஊதியங்கள் பிரிவினை பார்க்குக

ஒழுங்குக்கிரமமான கொடுப்பனவு

ஒழுங்கு கிரமமான கொடுப்பனவு ஊதியங்கள் சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், ஊதியங்களில் மேலதிக வேலை அல்லது ஏதும் விடுமுறை தினங்கள் தொடர்பாக பதிலுபகாரங்களை அது உள்ளடக்குகிறது. ஊதிய சபைகள் கட்டளைச்சட்டம் மற்றும் கடைகள் அலுவலக சட்டம் என்பன ஊதியங்கள் தொடர்பான கட்டளைகளைக் கொண்டுள்ளன.

ஒரு ஊதிய சபையானது ஒரு விசேடித்த வர்த்தகத்திற்கான ஊதிய காலப்பகுதியினை அமைத்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் பணியாளர்களுக்கு எந்த நாட்டிகளின் முடிவில் ஊதியம் கொடுக்கப்படும் எனவும் விதந்துரைக்கலாம். ஊதிய சபை தீர்மானத்தின் கீழ் ஒரு பணியாளர் உட்படுத்தப்படாதுவிடின் ஒரு பணியாளர் ஊதிய காலப்பகுதியை அமைத்துக்கொள்ள முடியும். எவ்வாறாயினும் எந்தக் காலப்பகுதியிலும் ஊதிய காலப்பகுதியானது ஒரு மாதத்தை விஞ்ச முடியாது. ஊதியசபை கட்டளைச்சட்டம் மற்றும் கடை மற்றும் அலுவலக சட்டம் என்பன பின்வரும் இடைவெளிகளில் ஊதியம் கொடுப்பனவு செய்வதை வேண்டி நிற்கின்றன. சம்பள சபை சட்டம் மற்றும் கடை பணியாளர் சட்டம் என்பன பின்வரும் இடைவேளிகளில் கொடுப்பனவு செய்யும் படி கோரி நிற்கின்றன.

– காலப்பகுதியானது 1 வாரத்தை விஞ்சியிருக்காத பொழுது ஊதிய காலப்பகுதி முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்

– காலப்பகுதியானது 2 வாரத்தை விஞ்சியிருக்காத பொழுது ஊதிய காலப்பகுதி முடிவதற்கு 5 நாட்களுக்கு முன்

– காலப்பகுதியானது 1 வாரத்தை அதிகரித்து( ஆனால் 1 மாதத்தை விட குறைவாக உள்ள போது) ஊதிய காலப்பகுதி முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்

ஒரு குறிப்பிட்ட தவிர்க்கமுடியாத சூழலில் வழங்குனரால் பணியாளருக்கு ஊதியம் உரிய காலப்பகுதியில் கொடுக்க முடியாதநிலை தோன்றுமிடத்து அவ்வுதியத்தை வைத்திருந்து அதனை இயலுமான கிட்டிய சந்தர்ப்பத்தில் வழங்கவேண்டும்.

ஊதியசபைகள் சட்டம் மற்றும் கடை மற்றும் அலுவரக சட்டமானது சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட கழிவுகளை தர வேறு எவ்வகையிலும் ஊதியக்கழிவு செய்யலாகாது என கோரி நிற்கின்றன. வருமானவரி ஊழியர் சேமலாப நிதிக்கான கழிவு அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கை நிதியத்துக்கான கழிவுகள் முதலியனவே சட்டத்தினால் முன்னிறுத்தப்பட்டவை. ஒரு தொழில் வழங்குனர் சட்டவிரோத கழிவுகளை மேற்கொள்வாராயின் சட்டநடவடிக்கைக்கு முகம் கொள்ளவேண்டும்.

தவறான நடத்தைக்கான ஒரு பணியாளரின் ஊதியத்தில் இருந்து ஒரு குறித்த தொகையை தொழில் வழங்குனர் கழிக்க முடியும். அவ்வகை தண்டப்பணத்தை தவிர்க்கும் வகையில் ஊழியர் தரத்தை பேண வேண்டப்படுகிறார். சட்டம் கோரிநிற்கும் உண்மையான பொறுப்புடமை என இதனை பொருள் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுக்கள்: போதிய காரணங்கள் இன்றி வேலைக்கு வராதிருத்தல். போதிய காரணங்கள் இன்றி பணிக்கு பிந்தி வருதல். பணிதொடர்பான உத்தரவுகளை வேண்டுமென்று மீறுதல். பணிநேரத்தின் போது மதுவருந்தியிருத்தல். ஆயினும் இவ்வகை தண்டப்பணமானது அக்காலப்பகுதிக்கான மொத்த ஊழியத்தின் 5 வீதத்தை விட அதிகரித்தலாகாது. அத்தொகை அதைவிட அதிகம்; எனின் ஆணையாளரின் அனுமதி கோரப்படவேண்டும்.

கடை & அலுவலகப் பணியாளர் சட்டத்தின் கீழாக இருக்கும் ஒழுங்குமுறை 17 ஆனது பணியமர்த்துபவர் ஒருவர் சம்பளம் பற்றிய பதிவேட்டினை வைத்திருக்கும்படியும், அதில் பின்வரும் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் கோருகிறது: பணியாளரின் பெயர்; வயது; பாலினம்; வகுப்பு அல்லது தரம் எதேனும் இருப்பின்; பதவியின் வகை அல்லது பெயர் அல்லது தொழில்; சம்பளம் கொடுக்கும் காலம் (மாதம், இரண்டு வாரங்கள் அல்லது வாரம்); சம்பளம் வழங்கப்படும் காலத்தின்போது செயல்படுத்தப்பட்ட பணியின் மணிக்கணக்கு; சம்பளம் வழங்கப்படும் காலத்தின்போது செயல்படுத்தப்பட்ட அதிகப்படியான பணியின் மணிக்கணக்கு; செலுத்தப்படக்கூடிய சம்பளத்திற்கான விகிதம்; செலுத்தப்படக்கூடிய அலவன்ஸ்-கள் (ஒவ்வொரு அலவன்ஸ்-ஐயும் தனித்தனியாக காட்டியபடி); சம்பள காலத்தில் ஈட்டிய சம்பளத்தின் மொத்தம்; மொத்த சம்பளத்தில் செய்யப்பட்ட அனைத்து பிடித்தங்கள் (ஒவ்வொரு பிடித்தத்தையும் தனித்தனியாக காட்டியபடி); சம்பள காலத்தின்போது சம்பளத்திலிருந்து கொடுக்கப்பட்ட முன்பணம்; சம்பள காலம் தொடர்பாக ஏதேனும் ஓய்வூதியம் அல்லது வருங்கால வைப்பு நிதிக்கு பணியாளர் மற்றும் பணியமர்த்துபவர் செய்த பங்களிப்புக்கள்; செலுத்தப்பட்ட மீத சம்பளத்தொகை மற்றும் செலுத்தப்பட்ட தேதி; ஒவ்வொரு சம்பள காலத்தின் தொடர்பாக செலுத்தப்பட்ட அதிகப்படியான நேரத்திற்கான மொத்த தொகை; வருமான வரிச் சட்டம் அல்லது மற்ற ஏதேனும் சட்டம் அல்லது நீதிமன்ற ஆணையின் கீழாக மீட்டுக்கொள்ளப்பட்ட தொகை; நிகர சம்பளத்தை பணியாளர் பெற்றுக்கொண்ட்தற்கான பற்றுச்சீட்டுக்கான ஒப்புகை. சம்பளம் வழங்கல் பதிவேட்டினை நாளது தேதிக்கு பதிவு செய்யவும் அதனை 4 ஆண்டுக் காலத்திற்கு போற்றி பாதுகாக்கவும் பணியமர்த்துபவர்கள் கோரப்படுகிறார்கள்.

கடை & அலுவலகப் பணியாளர் சட்டத்தின் கீழாக நேரடியாக சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள சட்டப்படியான உரிமை கொண்டவருக்கே பிடித்தங்கள் (சட்டத்தின் கீழாக இருப்பவை மற்றும் அப்படியான நபரின் ஒப்புதல் இல்லாதவை தவிர்த்து) ஏதுமில்லாது சம்பளத்தைக் கொடுக்க வேண்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட பிடித்தங்கள் பணியாளருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தின் 60% க்கும் அதிகமாக இருக்கலாகாது என சட்டம் கோருகிறது.

ஊதியங்களுக்கான வாரியங்களின் ஆணையானது வேறுமாதிரியான ஷரத்துக்களைக் கொண்டிருக்கிறது. அங்கீகாரமற்ற பிடித்தங்கள் ஏதுமின்றியும் கூட, சட்டப்படியாக பெற்றுக்கொள்ள உரிமை கொண்டவருக்கே சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் இது வேண்டுகிறது. எனினும், அப்படியான பிடித்தங்களானவை அமைச்சரால் குறிப்பிடப்பட்ட தொழில் வகையில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தின் 75% க்கு மிகாமலும் மற்ற தொழில் வகையில் ஊதியத்தின் 50% க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஆதாரம்: ஊதிய வாரியங்களின் அவசர சட்டத்தின் §2, 5 & 23 மற்றும் கடை & அலுவலகப் பணியாளர்கள் சட்ட ஒழுங்குறையின் §19

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435