ரயில்வே வேலைநிறுத்தம்- 45 சேவைகள் ரத்து

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக, சுமார் 45 ரயில்கள் சேவையில் ஈடுபடவில்லையென, ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

யாழ் – கொழும்பு வழித்தடத்திலான யாழ்தேவி ரயிலுடன் அலுவலக பணியாளர்கள் நன்மை கருதி 09 ரயில்கள் மாத்திரமே இன்று (21) காலை சேவையில் ஈடுபட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் ​ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகச்சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

எனினும் சில ரயில்கள் மட்டும் சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (20) நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளன. சம்பளம், கொடுப்பனவு, சலுகைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரயில்வே தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதக் காலப்பகுதிக்குள் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் உறுதி தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நேற்று நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலம் ரயில் பகிஷ்கரிப்பை நடைமுறைப்படுத்துவதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகார சங்கத்தின் தலைவர் கபில விமலரத்ண தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435