தமக்கு ஓய்வூதியம் பெற்றுத்தருமாறு கடந்த சில தினங்களாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுத்தத்தில் அங்கவீனமுற்ற படையினர் இன்று (03) உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு காரணங்களினால் 12 வருடங்களுக்கு குறைவான சேவைக்காலத்தையுடைய படையினரே தமக்கு ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரி இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது போராட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை ஜனாதிபதி எழுத்து மூலமாக வழங்கும் வரை போராடப்போவதாக இராணுவ உரிமை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு வகையில் உடல் ஊனமுற்ற படையினர் இன்று தமது கோரிக்கைக்கான உண்ணாவிர போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று அமைப்பின் தலைவர் யு.பி.வஸந்த தெரிவித்துள்ளார்.
தமக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரி கடந்த 31ஆம் திகதி தொடக்கம் படையினர் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்