மத்திய கலாசார நிதிய ஊழியர்களுக்கு ​வேதனம் வழங்குவதில் சிக்கல்

நிதிநெருக்கடி காரணமாக மத்திய கலாசார நிதியத்தில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு வேதனம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், பற்றுச்சீட்டுக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான், மத்திய கலாசார நிதியத்தின் பொருளாதார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய கலாசார நிதியத்தின் நாளாந்த வருமானம் நான்கு மில்லியன் ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் குறைந்தளவிலான வருகையே இதற்கான காரணமாகும்.

நிலவும் நிதிநெருக்கடி காரணமாக, நிதியத்தில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு வேதனம் வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்படுள்ளது.

இதேநேரம், கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

மூவாயிரம் அளவில் ஆட்சேர்ப்பு அவசியமாக இருந்த நிலையில், 5 ஆயிரத்து 58 பேர் உள்ளீர்க்க்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கைதான் வேதனம் வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்படுத்துவதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி அதிகாரி தெரிவித்துள்ளார்..

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435