உத்தேச புதிய தொழிற்சட்டத்தை எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழிக்கும் வகையில் கொண்டு வரப்படவுள்ள உத்தேச புதிய தொழிற்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று (21) ஒரு மணிநேர அடையாள போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

நாராஹேன்பிட்ட, தொழில்திணைக்களத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டாத்தில் இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொதுத்தொழிலாளர் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல்தேசிய நிறுவன தொழிற்சங்க கிளைகள் மற்றும் 20 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி நடத்தப்பட்ட தொழிலாளர் ஆலோசனை சபையில் முன்வைக்கப்பட்ட தொழிற்சட்ட முன்வரைவானது தொழிலாளர் உரிமைகளுக்கு கடுமையாக ஒழிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதனால் உடனியாக அதனை நிறுத்திக்கொள்ளுமாறு தொழில் அமைச்சரை அறிவுறுத்தியே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தனியார்துறையில் சுமார் 80 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுடைய உரிமையை பாதுகாக்கும் வகையில் உள்ள ஊதிய கட்டுப்பாட்டுச்சபை, கடை மற்றும் அலுவலக சட்டம், மகப்பேறு உதவி சட்டம், குழந்தைகள் மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பு சட்டம் போன்ற சட்டங்களை ரத்து செய்யும் வகையில் உள்ள உத்தேச புதிய தொழிற்சட்டமானது 8 மணி நேர வேலை உட்பட இதுவரை தொழிலாளர் அனுபவித்து வந்த பல்வேறு உரிமைகளையும் இல்லாதொழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில் வழங்குநருக்கும் தொழிலாளருக்கும் இடையிலான சேவை ஒப்பந்தத்தில் தொழில் வழங்குநர் தம் இஷ்டப்படி தொழில் நிபந்தனைகளை உள்ளடக்கும் உரிமையினை இப்புதிய உத்தேச தொழிற்சட்டம் சட்டரீதியாக வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் பரவியுள்ள மிக கீழ்தரமான மேன்பவர் முகவர் சேவை முறைக்கு இப்புதிய உத்தேச சட்டம் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்குகிறது. இதனூடாக தொழிலாளருடைய தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது.

நேரிடியாக பார்க்கும் போது இச்சட்டமானது தனியார்துறைக்கு தாக்கம் செலுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் கூட அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அரச துறையில் பணியாற்றுவோருக்கும் முழு நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் மொரிசன் நிறுவன கிளையின் செயலாளர் தெரிவித்தார்.

உத்தேச புதிய தொழிற்சட்ட மாற்றத்திற்கு அனுமதி வழங்கும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு நானும் என் குடும்பத்தினரும் வாக்களிக்க மாட்டோம் என்ற பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435