இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நேற்றுடன் (16) நிறைவுக்கு வந்துள்ளது.
உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன விரிவுரையாளர்கள், உதவிப் பதிவாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் கல்விசாரா உதவியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 தொழிற்சங்கங்கள் இணைந்து தமது சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு கோரி வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் குறித்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வியமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து வேலைநிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.